• Sat. Mar 28th, 2026

24×7 Live News

Apdin News

அரபுப் படை இரானை தாக்கிய போது ஹோர்முஸ் வழியே பார்சிகள் இந்தியாவுக்கு தப்பி வந்த கதை

Byadmin

Mar 28, 2026


பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, இஸ்லாமிய ஆட்சியாளர்களால் இழைக்கப்பட்ட மதத் துன்புறுத்தல்களில் இருந்து தப்பி ஓடிய பாரசீகர்களின் வழித்தோன்றல்களே பார்சிகள் என்று நம்பப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, இஸ்லாமிய ஆட்சியாளர்களால் இழைக்கப்பட்ட மதத் துன்புறுத்தல்களில் இருந்து தப்பி ஓடிய பாரசீகர்களின் வழித்தோன்றல்களே பார்சிகள் என்று நம்பப்படுகிறது.

இரானில் தற்போது நடந்து வரும் மோதல், உலகெங்கிலும் உள்ள எரிசக்தி சந்தைகளையும் பிற முக்கியப் பொருட்களுக்கான சந்தைகளையும் பாதித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, இரான் ஒரு முக்கியமான கடல்வழிப் பாதையை ஏறக்குறைய தடுத்துவைத்துள்ளது.

இதன் காரணமாக உலகளாவிய எரிசக்த்தி சந்தையில் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையிலான சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

இந்த நிலைமை, உலகை ஒரு பெரிய பிரச்னையின் மீது கவனம் செலுத்த வைத்துள்ளது. உலகளாவிய வர்த்தகத்தின் பெரும்பகுதி சில குறுகிய கடல்வழிப் பாதைகளையே சார்ந்துள்ளது. இந்தப் பகுதிகளில் ஏதேனும் நடந்தால், அது உலகம் முழுமைக்குமான வர்த்தகத்தைப் பாதிக்கக்கூடும்.

அத்தகைய மிக முக்கியமான பாதைகளில் ஒன்று ஹோர்முஸ் நீரிணை. இது இரானுக்கு அருகில் அமைந்துள்ளதோடு, பாரசீக வளைகுடாவை, தென்கிழக்கில் உள்ள ஓமன் வளைகுடா மற்றும் அரபிக் கடலுடன் இணைக்கிறது. உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் 20% இந்தக் குறுகிய பாதை வழியாகவே செல்கிறது. இது இந்தப் பகுதியை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்குகிறது.

இதனுடன் சேர்த்து, இப்பகுதிக்கு ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுத் தொடர்பும் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு இரானில் இருந்து குஜராத்திற்கு வந்த பார்சிகள், இந்தியாவை அடைவதற்கு முன்பு ஹோர்முஸில் சிறிது காலம் தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது. எனவே, ஹோர்முஸின் வரலாறு என்பது வர்த்தகம் மற்றும் அரசியல் பற்றியதாக மட்டுமின்றி, இடப்பெயர்வு, கலாசாரத் தொடர்புகள் பற்றியதாகவும் உள்ளது.

By admin