யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்யக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்காக அழைக்கப்பட்டது.
இதன்போது வழக்காளி தரப்பு சட்டத்தரணி மன்றில் ஆஜரானபோதும் எதிராளியான நாடாளுமன்ற உறுப்பினர் சார்பு சட்டத்தரணி உயர்நீதிமன்றில் ஓர் வழக்கில் ஆஜராகுவதனால் மன்றில் அச்சமயம் முன்னிலையாக முடியவில்லை என அறிவித்தல் வழங்கியிருந்தார்.
இதனை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்று இந்த வழக்கை ஜூன் 26 மற்றும் ஜூலை 24 ஆகிய திகதிகளில் விசாரணைக்காகத் திகதியிட்டது.
The post அர்ச்சுனாவின் எம்.பி. பதவிக்கு எதிரான வழக்கு ஜூன் 26 இற்கு ஒத்திவைப்பு! appeared first on Vanakkam London.