• Wed. Jan 28th, 2026

24×7 Live News

Apdin News

அர்ஜித் சிங்: தமிழ், இந்தி என பல மொழி பாடல்களை பாடியுள்ள இவர் திடீரென பாடப்போவதில்லை என அறிவித்தது ஏன்?

Byadmin

Jan 28, 2026


அர்ஜித் சிங் பின்னணிப் பாடல் துறையில் இருந்து ஓய்வு பெறுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான பாடகர்களில் ஒருவரான அர்ஜித் சிங், பின்னணிப் பாடல் உலகில் ஒரு புகழ்பெற்ற நபராகத் திகழ்கிறார். பல சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடிய பெருமை அவருக்கு உண்டு.

‘நான் உன் அருகினிலே’, ‘நீயே வாழ்க்கை என்பேன்’ , ‘அடடா என்ன அழகு’ போன்ற தமிழ் பாடல்களையும் இவர் பாடியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை மாலை அவர் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம், பின்னணிப் பாடல் துறையில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தபோது, அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். சமூக வலைதளங்களில் இது பெரும் விவாதப் பொருளாகவும் மாறியது.

இருப்பினும், இசையுடனான தனது தொடர்பு தொடரும் என்றும், தான் தொடர்ந்து இசையமைப்பேன் என்றும் அர்ஜித் சிங் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் தனக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்த பின்னணிப் பாடல் துறையை விட்டு, வெறும் 40 வயதிலேயே ஓய்வு பெறுவதாக அர்ஜித் சிங் அறிவித்தது ஏன்?

By admin