• Mon. Oct 19th, 2026

24×7 Live News

Apdin News

அறிகுறிகள் இல்லாமலும் உருவாகும் கருப்பை நார்த்திசுக் கட்டிகள் – மாதவிடாயின்போது கவனிக்க வேண்டியது என்ன? 10 கேள்வி – பதில்கள்

Byadmin

Oct 19, 2026


கருப்பை நார்த்திசுக் கட்டிகள்

    • எழுதியவர், டாக்டர் ஹிமானி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

கருப்பையில் ஏற்படும் ஃபைப்ராய்டுகள் (நார்த்திசுக் கட்டிகள்) பெண்களிடையே காணப்படும் மிகவும் பொதுவான பிரச்னைகளில் ஒன்றாகும்.

மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, அடிவயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகளை இவை ஏற்படுத்தலாம்.

சில பெண்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளின்போது இத்தகைய நார்த்திசுக் கட்டிகள் இருப்பது கண்டறியப்படலாம்.

இக்கட்டிகள் உள்ள எல்லாப் பெண்களுக்கும் அறுவை சிகிச்சை தேவையில்லை. அவற்றின் அளவு, கருப்பையில் அவை அமைந்துள்ள இடம், அறிகுறிகளின் தீவிரம், பெண்ணின் வயது, எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளும் விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் சிகிச்சை தீர்மானிக்கப்படுகிறது.

முக்கியமாக, கருப்பையில் இத்தகைய கட்டிகள் இருப்பதால் அவை புற்றுநோய் என்று அர்த்தமல்ல.

By admin