0
புதுமுக கலைஞர்கள் தர்ஷன் – சார்மி முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘சரீரம்’ எனும் திரைப்படம்- காதலை பேசும் உன்னதமான படைப்பு என்றும், இம்மாத இறுதியில் வெளியாகிறது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் ஜீ. வி. பெருமாள் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சரீரம் ‘ எனும் திரைப்படத்தில் தர்ஷன், சார்மி, ஜெ .மனோஜ், ‘பாய்ஸ்’ ராஜன், ஷகீலா, மதுமிதா, சுரேஷ், கௌரி, லில்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
டோர்னலா பாஸ்கர் & கே. பரணி குமார் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வி. டி. பாரதிராஜா இசையமைத்திருக்கிறார். காதலை பேசும் இந்த திரைப்படத்தை ஜீ. வி. பி. பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜீ. வி. பெருமாள் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 26 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” கடவுள் ஒவ்வொரு நபருக்கும் அளித்திருக்கும் விலை மதிக்க முடியாத கொடை தான் இந்த சரீரம். இதனுடைய முக்கியத்துவத்தை யாரும் உணர்ந்து கொள்வதில்லை. அதே தருணத்தில் தன் சரீரத்தில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளும் உரிமை எவருக்கும் இல்லை. இதனை விரிவாகவும், விசாலமாகவும் பேசும் படைப்பாக இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது ” என்றார்.