0
தமிழில் வளர்ந்து வரும் நடிகரான ஆனந்த் நாக் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அறிவான்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆகாய வெண்ணிலாவே’ எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி காதலித்து கொண்டிருக்கும் இளம் காதலர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இயக்குவர் அருண் பிரசாத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அறிவான் ‘ திரைப்படத்தில் ஆனந்த் நாக், ஜனனி , பிர்லா போஸ், கௌரி சங்கர் , ‘ பொய்ஸ்’ ராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யஸ்வந்த் பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் இரா இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை எம் டி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் துரை மகாதேவன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘ஆகாய வெண்ணிலாவே..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலின் தொடக்கத்தில் ‘ உன் விழிகளில் ஓராயிரம் கனா உன் பதில்களில் ஓராயிரம் வினா” எனும் வரிகள் இடம் பிடித்திருக்கிறது இந்த வரிகள் காதலர்களுக்கு பிடித்த வரிகள் என்பதால் காதலித்துக் கொண்டிருக்கும் காதலர்களுக்கிடையே இந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.