• Thu. Oct 24th, 2024

24×7 Live News

Apdin News

அறிவியல்: மூளையில் மின்னணு சாதனம் பொருத்தி மன அழுத்தம், மறதிக்கு சிகிச்சை – எப்படி?

Byadmin

Oct 24, 2024


மனநலப் பிரச்னைகளை சரிசெய்ய மின்னணு சாதனங்கள்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ஜெனைன் மச்சின்
  • பதவி, பிபிசி நியூஸ், கேம்ப்ரிட்ஜ்

இதயப் பிரச்னைகளைக் கட்டுப்படுத்தும் இதயமுடுக்கி (pacemaker) முதல் செவிப்புலனை மேம்படுத்த உதவும் கோக்லியர் சாதனம்(cochlear) வரை சிறிய வகை மின்னணு சாதனங்களை உடலில் பொருத்துவதன் மூலம் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை ஏற்கெனவே மாறியுள்ளது.

தற்போது, கேம்பிரிட்ஜில் உள்ள ஆரோக்கியம், அறிவியல் மற்றும் வணிகத் துறைகளைச் சேர்ந்த குழுவினருக்கு, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய தொழில்நுட்பங்களை விரைவாகக் கண்டுபிடிக்கப் பல கோடிகள் நிதி வழங்கப்பட்டுள்ளது.

பிரிட்டனை சுற்றியுள்ள ஆராய்ச்சியாளர்கள் அவர்களின் கண்டுபிடிப்புகளை சோதனை செய்ய வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் நம்பிக்கைக்குரிய வகையில் செயல்படும் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி மறதி, மன அழுத்தம் மற்றும் நாள்பட்ட வலியை ஏற்படுத்தும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

கேம்பிரிட்ஜ் குழுவிலுள்ள முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியர் ஜார்ஜ் மேல்லியராஸ் இந்த அறிவிப்பு தனது புதிய திட்டத்தை ஆதரிக்கும் என்று நம்புகிறார்.

By admin