• Mon. Mar 2nd, 2026

24×7 Live News

Apdin News

அலி ரெஸா ஆராஃபி: இரானின் அடுத்த அதி உயர் தலைவராக கருதப்படும் இவர் எப்படிப்பட்டவர்?

Byadmin

Mar 2, 2026


அலி ரஸா ஆராஃபி

பட மூலாதாரம், SHAFEQNA

படக்குறிப்பு, ஆயதுல்லா அலி ரெஸா ஆராஃபி

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலில் இரானின் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதை அடுத்து, இரானில் இடைக்கால தலைமை சபை பொறுப்பேற்றுள்ளது.

மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் சபையில், இரான் அதிபர் மசூத் பெஸெஷ்கியன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கோலம்-ஹோசெய்ன் மோஹ்செனி எஜெஹெய் மற்றும் பாதுகாவலர்கள் மன்றத்தின் உறுப்பினர் ஆயதுல்லா அலி ரெஸா ஆராஃபி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அலி ரெஸா ஆராஃபி, இடைக்காலத் தலைமை சபையின் ஜூரிஸ்டாக (சட்ட வல்லுநர்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

இரான் அரசியலமைப்பின் 111-வது பிரிவின்படி, அதி உயர் தலைவர் காலமானாலோ, ராஜினாமா செய்தாலோ அல்லது அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால், இடைக்காலத் தலைமை சபை அமைக்கப்படுகிறது.

இடைக்காலத் தலைமை சபை என்ன செய்யும்?

இப்போது இரான் நாட்டின் புதிய அதி உயர் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்த சபைதான் நாட்டின் ஆட்சியை நடத்தும்.

By admin