• Mon. May 5th, 2025

24×7 Live News

Apdin News

அல்காட்ராஸ்: 3 மடங்கு அதிக செலவு, மோசமான தீவு சிறையை திறக்க டிரம்ப் உத்தரவு

Byadmin

May 5, 2025


அல்காட்ராஸ் சிறைச்சாலை, அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அல்காட்ராஸ் சிறைச்சாலை

கலிபோர்னியா கரையோர தீவில் அமைந்துள்ள பழைய சிறைச்சாலையான அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அவருடைய சமூக ஊடக பக்கமான ட்ரூத் சோசியலில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்கா நீண்டகாலமாக கொடிய மற்றும் வன்முறை குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

அல்காட்ராஸ் சிறைச்சாலையை திறப்பது சட்டம், ஒழுங்கு மற்றும் நீதியின் அடையாளமாக திகழும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கடுமையான சிறைகளில் ஒன்று என்ற மோசமான பெயரை இந்த சிறை பெற்றிருந்தது.

1963ஆம் ஆண்டு இந்த சிறைச்சாலை மூடப்பட்டு அல்காட்ராஸ் தீவு தற்போது ஒரு சுற்றுலாத் தளமாக செயல்பட்டு வருகிறது. சான் பிரான்சிஸ்கோவில் கோல்டன் கேட் பாலத்திற்கு அருகே இது அமைந்துள்ளது.

By admin