தோல்வியே காணாத காளை: பத்தாம் வகுப்பு மாணவியிடம் அடங்கும் ‘சின்ன ஸ்டைல்’
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த அழகுபேச்சி, கடந்த 4 ஆண்டுகளாக 2 காளைகளை வளர்த்து வருகிறார்.
பத்தாம் வகுப்பு படித்து வரும் இவர், போட்டிகளுக்குக் காளைகளைத் தயார்படுத்தி வருகிறார். வாடிவாசலில் தனது காளையை தனியொரு பெண்ணாக அவர் அவிழ்த்துவிடுகிறார்.
ஏராளமான பரிசுகளைத் தனது காளை வென்றுள்ளதாகக் கூறுகிறார், அழகுபேச்சி. ஜல்லிக்கட்டுக்கு தனது மகள் செல்வதால் விமர்சனங்களை எதிர்கொள்வதாகக் கூறுகிறார், அவரின் தந்தை முருகன்.
இதே கருத்தை முன்வைக்கிறார் அழகுபேச்சியின் தாய் பிரியா. அழகுபேச்சியைப் போல அவரது தம்பியும் காளை வளர்ப்பில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
விரிவாக காணொளியில்…
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு