• Tue. Jan 27th, 2026

24×7 Live News

Apdin News

அழகுராஜா: போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்ட நபரின் பின்னணியில் உள்ள 20 ஆண்டு கால மோதல் என்ன?

Byadmin

Jan 27, 2026


பெரம்பலூர் அருகே போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்ட அழகுராஜா யார்?
படக்குறிப்பு, காவல்துறை என்கவுன்டரில் கொல்லப்பட்ட அழகுராஜா

பெரம்பலூர் அருகே போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய அழகுராஜா உயிரிழந்துவிட்டதாக, ஜனவரி 27-ஆம் தேதியன்று திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நீதிமன்ற விசாரனை முடிந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வெள்ளைக்காளி என்ற நபர் மீது சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் காவலர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அதன் தொடர்ச்சியாக இந்த என்கவுன்டர் நடந்துள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளைக்காளி மீது கொலை, கொலை முயற்சி, போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சென்னை புழல் சிறையில் அடைக்கப்படிருந்த அவரை, ஒரு வழக்கு விசாரணைக்காக கடந்த 23-ஆம் தேதியன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

குற்றம், சட்டம், கைதிகள், வன்முறை, தமிழ்நாடு
படக்குறிப்பு, தாக்குதல் நடத்திய கும்பல் காரில் தப்பியோடிவிட்டது என்கிறது காவல்துறை

‘உணவருந்தும்போது வெடிகுண்டு வீசி தாக்குதல்’

நீதிமன்றப் பணிகள் முடிந்த பிறகு சென்னை புழல் சிறையில் அவரை அடைப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலீசார் அழைத்துச் சென்றனர்.

By admin