ஆசியாவில் மிகவும் அழிந்து வரக்கூடிய நன்னீர் மீன் இனங்களைக் கொண்ட உலகின் முதல் மூன்று நாடுகள் பட்டியலில் இந்தியாவும் ஒன்று. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் அருகி வரும் நன்னீர் மீன் இனங்கள் இருப்பதாக சர்வதேச அறிவியல் ஆய்விதழான நேச்சரில் வெளியான உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கை கூறுகிறது.