• Thu. Oct 22nd, 2026

24×7 Live News

Apdin News

அழிவே இல்லாத ‘மரணமில்லா’ ஜெல்லிமீன்: மனிதர்கள் முதுமை எய்துவதை தடுக்க உதவுமா? எப்படி?

Byadmin

Oct 22, 2026


புத்துயிர் பெறும் திறன் கொண்ட 'அழிவில்லா ஜெல்லிமீன்'

படக்குறிப்பு, முதுமையால் இறப்பதற்கு முன்பு, இந்த ஜெல்லிமீன்கள் எத்தனை முறை புத்துயிர் பெற முடியும் என்பதற்கு ஒரு வரம்பு இருக்கக்கூடும்.

    • எழுதியவர், கதரினா ஜிம்மர்
    • பதவி, பிபிசி ஃப்யூசர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

அளவில் சிறியதும் ஒளி ஊடுருவக்கூடிய உடலமைப்பைக் கொண்டதுமான துரிதொப்சிஸ் தோஹ்ர்னி (Turritopsis dohrnii) என்ற ஜெல்லிமீனைக் கொல்வது, வியப்பளிக்கும் வகையில் மிகவும் கடினமானதாக உள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகத்தின் கால்வெஸ்டன் வளாகத்தில் பணியாற்றும் கடல்சார் உயிரியல் நிபுணர் மரியா மிக்லியெட்டா, இந்த ஜெல்லிமீன்களை வெட்டியும், கொதிக்க வைத்தும், பட்டினி போட்டும், அதிக உப்புத்தன்மையுள்ள சூழலில் வைத்தும், நன்னீரில் விட்டும் பல சூழ்நிலைகளில் பரிசோதித்துள்ளார்.

இந்த எல்லா நிலைகளிலும், இந்த அசாதாரண உயிரினங்கள் மரணத்திலிருந்து தப்பித்துள்ளன.

உயிர்வாழ்வதற்குச் சவாலான சூழ்நிலைகளில், அவை திடீரென்று இயக்கத்தை நிறுத்திக்‌கொண்டு, தாம் வைக்கப்பட்டிருக்கும் பாட்டிலின் அடிப்பகுதியில் விழுகின்றன.

அதன்பின் ஓர் அதிசயம் நிகழ்கிறது : வயதுவந்த ஜெல்லிமீன்களின் குடை வடிவ உடலமைப்பையும் உணர்கொம்புகளையும் போல எந்த விதத்திலும் தோன்றாமல், தங்களை உருமாற்றிக்கொண்டு உயிரணுத் திரள்களாக மாறிவிடுகின்றன.

By admin