• Sun. Feb 1st, 2026

24×7 Live News

Apdin News

அவசரகால நிலை சட்டம் நீடிப்பு! – Vanakkam London

Byadmin

Feb 1, 2026


பொது அவசரகால நிலை சட்டம் நீடிக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிலவிய அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி பொது பாதுகாப்பு மற்றும் நாட்டின் நல்வாழ்வைப் பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைக்கு அவசியமான விநியோகங்கள் மற்றும் சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு பொது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அவசரகால ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் தொடர்பான கட்டளைகளைத் திருத்தம் செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்ட குறித்த கட்டளைகள், ஜனவரி மாதம் 28 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் திருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்குரிய வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய அவசரகால கட்டளைகளுக்கு இணங்க, இதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த பல கட்டளைகளைத் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், பல புதிய கட்டளைகளை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவசரகால நிலைப் பிரகடனத்துடன் அரச அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்தும், குறித்த கட்டளைகளுக்கு முரணாகச் செயற்படுபவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அந்தக் கட்டளைகளின் மூலம் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

By admin