• Mon. Aug 17th, 2026

24×7 Live News

Apdin News

அவிக்லி: இந்தியாவில் புதிய இன்சுலின் ஊசி அறிமுகம் – நீரிழிவு நோயாளிகள் வாரம் ஒருமுறை போட்டால் போதும்

Byadmin

Aug 17, 2026


அவிக்லி, நீரிழிவு, இந்தியாவில் புதிய இன்சுலின் அறிமுகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அவிக்லி (இதன் ஜெனெரிக் பெயர் இன்சுலின் ஐகோடெக்) என்பது டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயுள்ள வயது வந்த நோயாளிகளுக்கான மிக நீண்ட காலம் செயல்படும் பேசல் இன்சுலின் ஆகும். (சித்தரிப்புப் படம்)

    • எழுதியவர், டிங்கல் போப்லி
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

டேனிஷ் மருந்து நிறுவனமான நோவோ நோர்டிஸ்க், ஜூலை 9-ஆம் தேதி இந்தியாவில் ‘அவிக்லி’ என்ற இன்சுலின் ஊசியை அறிமுகப்படுத்தியது.

இது மருத்துவப் பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்பட்ட உலகின் முதல் வாராந்திர பேசல் இன்சுலின் ஊசி ஆகும்.

டைப் 1 நீரிழிவு நோயாளிகளின் உடலில் இயற்கையாக இன்சுலின் உற்பத்தி ஆகாது. அவர்கள் தினசரி இன்சுலின் ஊசிகளையே சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.

டைப் 2 அல்லது கர்ப்பகால நீரிழிவு நோயில் மாத்திரைகள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் பலனளிக்காதபோது இன்சுலின் தேவைப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொரு நோயாளிக்கும் தேவையான இன்சுலின் அளவு வேறுபடும்.

இன்சுலின் எப்படி செயல்படுகிறது? புதிய வாராந்திர ஊசி சிகிச்சையில் எவ்வாறு உதவும்? என்பதைப் புரிந்துகொள்ள பிபிசி நியூஸ் பஞ்சாபி, லூதியானாவில் உள்ள தயானந்த் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உட்சுரப்பியல் துறைத் தலைவர் மருத்துவர் நவீன் மிட்டல் மற்றும் மும்பை சைஃபி மருத்துவமனையின் உட்சுரப்பியல் நிபுணர் மருத்துவர் ஷஹிலா ஷேக்குடன் பேசியது.

By admin