• Mon. Oct 14th, 2024

24×7 Live News

Apdin News

அவுஸ்திரேலியா பயணிக்கவுள்ள மன்னர்; வரவேற்பு நிழ்வில் ‘அவமதிப்பு’ சர்ச்சை!

Byadmin

Oct 14, 2024


இங்கிலாந்து மன்னர் சார்லஸ், அரச உத்தியோகபூர்வ பயணமாக இம்மாதம் 21ஆம் திகதி அவுஸ்திரேலியா பயணிக்கத் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக கான்பெராவில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவில் மன்னரின் வரவேற்பு நிழ்வில் கலந்துகொள்ள 6 மாநிலங்களின் ஆளுநர்கள் மறுப்பு தெரிவித்துள்ளமை தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் (New South Wales), விக்டோரியா (Victoria), குயின்ஸ்லாந்து (Queensland), மேற்கு அவுஸ்திரேலியா (Western Australia), தெற்கு அவுஸ்திரேலியா (South Australia) மற்றும் டாஸ்மேனியா (Tasmania) ஆகிய 06 மாநில ஆளுநர்களே, பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டு, மன்னரை வரவேற்கும் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாது என்று கூறியுள்ளனர்.

இது மன்னரை அவமதிக்கும் விடயம் என பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, சமூக ஊடகங்களில் “மன்னர் இழிக்கப்படுகிறார்” என்று கருத்து வெளியிடப்படுகிறது.

பக்கிங்ஹாம் அரண்மனை இது தொடர்பில்  கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த ஆண்டு முற்பகுதியில் புற்றுநோய் கண்டறியப்பட்டமைக்குப் பின்னர், அவுஸ்திரேலியாவுக்கான விஜயம் மன்னரின் மிகப்பெரிய பயணமாக கருதப்படுகிறது.

அவுஸ்திரேலியாப் பயணத்திற்குப் பிறகு, மன்னரும் ராணியும் காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்திற்காக சமோவாவுக்கு பயணிக்கவுள்ளனர்.

By admin