• Mon. Oct 6th, 2025

24×7 Live News

Apdin News

அவுஸ்ரேலியாவில் 100 முறை துப்பாக்கிச் சூடு நடத்திய 60 வயது முதியவர் கைது!

Byadmin

Oct 6, 2025


அவுஸ்ரேலியா – சிட்னி நகரில் நேற்றிரவு 20 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 60 வயது முதியவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது பயங்கரவாதச் செயலோ அல்லது குண்டர் கும்பல் தாக்குதலோ அல்ல என்று பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவலில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததும் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சம்பவத்தில் 60 வயது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்த இரு ரைஃபிள் ரகத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சந்தேகநபர் துப்பாக்கியால் 100 முறை சுட்டிருக்கக்கூடும் என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் கார்களையும் பொலிஸாரையும் குறிவைத்ததாகச் சொல்லப்படுகிறது. பலத்தச் சத்தம் கேட்டதாக அருகில் இருந்தவர்கள் கூறினர்.

அவுஸ்ரேலியாவில் இதுபோன்ற துப்பாக்கிச் சூடடுச் சம்பவங்கள் நடப்பது அரிது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணை தொடர்கிறது.

By admin