• Mon. Mar 9th, 2026

24×7 Live News

Apdin News

ஆகாஷ் டெலிசன்: மானா மதுரையில் அஜித் குமாரை தொடர்ந்து மற்றொரு காவல் மரணமா?

Byadmin

Mar 9, 2026


அஜித் குமாரை தொடர்ந்து மானாமதுரையில் மற்றொரு காவல் மரணமா?
படக்குறிப்பு, ஆகாஷ் டெலிசன்

மானா மதுரையில் விசாரணை கைதி ஆகாஷ், போலீசார் கடுமையாக தாக்கியதால் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மானாமதுரையில் அஜித் குமார் போலீசாரின் விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதே மானாமதுரையில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது பேசு பொருளாக மாறியுள்ளது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஒரு வழக்கில் கடந்த 6ம் தேதி ஆகாஷ் டெலிசன் மற்றும் கோபி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்

பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஆகாஷ், தப்ப முயன்ற போது அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டதாக காவல்துறை கூறுகிறது. மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் டெலிசன் சனிக்கிழமை நள்ளிரவு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

By admin