• Thu. Aug 21st, 2025

24×7 Live News

Apdin News

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

Byadmin

Aug 21, 2025


‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் முதன்மையான வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத  புதிய திரைப்படத்தில் ‘ஆக்சன் கிங் ‘அர்ஜுன்,  அபிராமி,  ப்ரீத்தி முகுந்தன்,  ஜான் கொக்கன்,  திலீபன், பவன்,  அர்ஜுன் சிதம்பரம் , விவேக் பிரசன்னா, பாலா ஹசன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். ஃபேமிலி எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம்- கல்பாத்தி எஸ். கணேஷ்- கல்பாத்தி எஸ். சுரேஷ் – ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

கதாநாயகனாகவும், எதிர் நாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து பான் இந்திய அளவில் கவனம் ஈர்த்திருக்கும் ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் நடிப்பில் தயாராவதாலும் , ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதாலும் இந்த திரைப்படத்திற்கு அறிவிப்பு வெளியான நிலையிலேயே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

By admin