• Thu. Oct 23rd, 2025

24×7 Live News

Apdin News

ஆசிய இளையோர் விளையாட்டு விழா | கடற்கரை கரப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு 2 வெற்றிகள்

Byadmin

Oct 23, 2025


மனாமா சமா பே கடற்கரை அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான பி குழுவுக்கான இரண்டு போட்டிகளில் இலங்கை வெற்றியீட்டியது.

மாலைதீவுகளுக்கு எதிராக நேற்று மாலை நடைபெற்ற மிகவும் பரபரப்பான போட்டியில் 21 – 15, 12 – 21, 15 – 7 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 – 1 என்ற செட்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்றது.

தொடர்ந்து கத்தாருக்கு எதிராக இரவு நடைபெற்ற போட்டியிலும் 21 – 18, 8 – 21, 15 – 12 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 – 1 என்ற செட்கள் வித்தியாசத்தில்  இலங்கை  வெற்றிபெற்றது. இந்தப் போட்டியும் மிகவும் பரபரப்பை தோற்றுவித்தது.

இலங்கை அணியில் திதுல மஹீம, குசல் துல்மின ஆகிய ஜோடியினர் இடம்பெற்றனர்.

இதேவேளை, நேற்று இரவு நடைபெற்ற ஆண்களுக்கான ஏ குழு கபடி போட்டியில் பலம்வாய்ந்த பாகிஸ்தானிடம் 36 – 55 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை தோல்வி அடைந்தது.

ஆட்டத்தின் முதலாவது பகுதியில் இலங்கை அணியினர் தவறுகளை இழைத்ததால் 16 – 32 என்ற புள்ளிகள் கணக்கில் பின்னிலையில் இருந்தனர்.

இரண்டாவது பகுதியில் திறமையாக விளையாடி பாகிஸ்தானுக்கு பலத்த சவால் விடுத்தபோதிலும் அந்தப் பகுதியிலும் இலங்கை 20 – 23 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்தது.

The post ஆசிய இளையோர் விளையாட்டு விழா | கடற்கரை கரப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு 2 வெற்றிகள் appeared first on Vanakkam London.

By admin