• Thu. Sep 11th, 2025

24×7 Live News

Apdin News

ஆசிய கோப்பை: UAE அணியை துவம்சம் செய்த இந்தியா; அடுத்த போட்டி பாகிஸ்தானுடன்

Byadmin

Sep 11, 2025


INDIA VS UAE

பட மூலாதாரம், Getty Images

துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையின் இரண்டாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா, யூஏஇ அணிகள் மோதின. நீண்ட காலத்துக்கு பிறகு டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. ஓப்பனர் இடத்தை கில்லுக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய சாம்சன், விக்கெட் கீப்பராக தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.

சாம்சனுக்கு பதிலாக விக்கெட் கீப்பராக அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜிதேஷ் சர்மாவுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் விதமாக, ஸ்பெசலிஸ்ட் வேகப்பந்து வீச்சாளராக பும்ரா மட்டும் சேர்க்கப்பட்டு, பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டார்.

துபாய் ஆடுகளத்தில் 175-180 ரன்களே வெற்றிக்கு போதுமானது எனக் கூறப்படும் நிலையில், டாஸ் வென்ற சூர்யகுமார் யாதவ் சரியான முடிவெடுத்தார்.

நெருக்கடி கொடுத்த பும்ரா

பும்ராவின் பந்து வீச்சு எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது

பட மூலாதாரம், SAJJAD HUSSAIN/AFP via Getty Images

படக்குறிப்பு, பும்ராவின் பந்து வீச்சு எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது

ஹார்திக் பாண்ட்யா வீசிய முதல் ஓவரில் யூஏஇ அணி, 10 ரன்கள் எடுத்து நேர்மறையாக இன்னிங்ஸை தொடங்கியது. முதல் ஓவரிலேயே இரு பவுண்டரிகளை விளாசிய ஷரஃபு, பும்ரா, அக்சர் படேல் வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்சர் அடித்து அதகளப்படுத்தினார்.

By admin