• Thu. Nov 13th, 2025

24×7 Live News

Apdin News

ஆடம் கில்கிறிஸ்ட் தனது திறனால் கீப்பர்கள் மீதான பார்வையை மாற்றியது எப்படி?

Byadmin

Nov 13, 2025


ஆடம் கில்கிறிஸ்ட்

பட மூலாதாரம், Getty Images

”முன்பெல்லாம் கீப்பர் என்று சொன்னாலே தோனி, பவுச்சர் பேருக்கெல்லாம் முன்பு இவர்தான் ஞாபகம் வருவார்” – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் பற்றிப் பேசும்போது தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் பாபா இந்திரஜித் சொன்னது இது.

நவம்பர் 14 அன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கியமான அங்கமாக இருந்த (1996 முதல் 2008 வரை) ஆடம் கில்கிறிஸ்ட்டின் பிறந்த நாள்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக 905 அட்டமிழப்புகள் செய்திருக்கும் கில்கிறிஸ்ட் பற்றி சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் (முன்பு – தேசிய கிரிக்கெட் அகாடெமி) பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரன், பாபா இந்திரஜித் என விக்கெட் கீப்பிங் அனுபவம் கொண்ட இருவரிடம் பேசினோம்.

‘வெகுதூரம் பாய்ந்த கீப்பர்’

தான் கிளவுஸ் வாங்க நினைத்தபோது, கில்கிறிஸ்ட் என்ன கிளவுஸ் வைத்திருந்தாரோ அதுபோல் வாங்க வேண்டும் என்று யோசித்திருக்கிறார் பாபா இந்திரஜித்.

ஆடம் கில்கிறிஸ்ட்டை மிகவும் ஸ்டைலிஷான, அதேசமயம் டெக்னிக்கலாகவும் சிறந்த கீப்பர் என்கிறார் அவர்.

By admin