• Mon. Nov 17th, 2025

24×7 Live News

Apdin News

ஆதரவற்றோர் இல்லத்துக்கு வழங்கிய 3.12 ஏக்கர் நிலம் மீட்பு | 3.12 acres of land donated to an orphanage recovered

Byadmin

Nov 17, 2025


சென்னை: சென்​னை​யில் ஆதர​வற்​றோர் இல்​லத்​துக்கு வழங்​கப்​பட்ட நிலத்தை வணிக நோக்​கில் பயன்​படுத்​தி​ய​தால், 3.12 ஏக்​கர் நிலத்தை அரசு மீட்டு நடவடிக்கை எடுத்​துள்​ளது.

இது தொடர்​பாக, சென்னை மாவட்ட ஆட்​சி​யரகம் வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: சமூக சேவைக்​கான நிபந்​தனை​களின் அடிப்படையில் அம்​பத்​தூர், ஒரகடம் பகு​தி​யில் உள்ள அன்னை ஆதர​வற்​றோர் இல்​லத்​துக்கு 3.12 ஏக்​கர் நிலம் அரசு சார்​பில் வழங்கப்பட்டிருந்தது.

இந்​நிலை​யில், சமூக சேவைக்​காக வழங்​கப்​பட்ட நிலத்தை வணிக நோக்​கங்​களுக்​காக பயன்​படுத்​திய காரணத்​தால் அன்னை ஆதர​வற்​றோர் இல்​லத்​துக்கு ஒப்​படைப்​பட்ட 3.12 ஏக்​கர் நிலம் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது.

சென்னை மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே முன்​னிலை​யில், மாவட்ட நிர்​வாகம் அதி​காரப்​பூர்​வ​மாக அந்​நிலத்தை கடந்த 14-ம் தேதி மீட்​டெடுத்​துள்​ளது.

வரு​வாய் வாரி​யத்​தின் நிலை ஆணை​கள் மற்​றும் சென்னை உயர்​ நீ​தி​மன்ற உத்​தர​வு​களின் அடிப்​படை​யில், இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டு, மீட்​கப்​பட்ட நிலம் அரசின் கட்​டுப்​பாட்​டின் கீழ் கொண்டு வரப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



By admin