• Thu. Apr 2nd, 2026

24×7 Live News

Apdin News

ஆதவ் அர்ஜுனா கார்மோதி காவலர் காலில் எலும்பு முறிவு!

Byadmin

Apr 2, 2026


2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் இன்று திருச்சி கிழக்குத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து அத்தொகுதியில் பிரச்சாரமும் மேற்கொண்டார்.

இந்த பிரச்சாரத்தின்போது, அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் கார் ஏறியதில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரின் கால் எலும்பு முறிந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் பிரச்சார வாகனத்தைப் பின்தொடர முயன்றபோது, கார் செல்வதற்காக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் சதீஷ் என்பவர் பேரிகார்டுகளை தள்ளிவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது கார் அவரின் கால்மீது ஏறியதாக கூறப்படுகிறது. இதில் அவரது கால் எலும்பு முறிந்து பலத்த காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் நிகழ்ந்தபோது ஆதவ் அர்ஜுனா விஜய்யின் வாகனத்தில் இருந்ததாகத் கூறப்படுகிறது. விபத்தை தொடர்ந்து தவெக தொண்டர்கள் காவலரை தூக்கிக்கொண்டு சென்று ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டுள்ளனர்.

தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin