• Sat. Jan 10th, 2026

24×7 Live News

Apdin News

ஆந்திராவில் முஸ்லிம் அல்லாத நபர்களுக்கும் விருத்தசேதனமா? புதிய சர்ச்சை

Byadmin

Jan 9, 2026


விருத்தசேதன அறுவை சிகிச்சை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பல்லா சதீஷ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் விருத்தசேதன அறுவை சிகிச்சைகள் அதிகரித்திருப்பது குறித்த பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆண்குறியின் நுனியை மூடியிருக்கும் தோலை அகற்றும் அறுவை சிகிச்சையை விருத்தசேதனம் (Circumcision) என்று அழைக்கின்றனர்.

மருத்துவ ரீதியில் இந்த அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது என்பது ஒருபுறம் என்றாலும், இஸ்லாமியர்கள், யூதர்கள் என சில சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மதரீதியிலான காரணங்களுக்காக விருத்தசேதனம் செய்கிறார்கள்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஓர் அரசுத் திட்டத்தின் கீழ் விருத்தசேதன அறுவை சிகிச்சைகள் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டி, மாநில சுகாதார அமைச்சருக்கு சிபிஐ முன்னாள் இயக்குநர் நாகேஸ்வர ராவ் கடிதம் ஒன்றை எழுதியதை அடுத்து இந்த ​​விவாதம் புதிய திருப்பத்தை எடுத்தது.

“மருத்துவ காரணங்களுக்காக என்ற போர்வையில் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு விருத்தசேதனம் செய்வதன் மூலம் அவர்கள் ஓர் மதத்தின் குறிக்கோளை செயல்படுத்துகிறார்கள்” என்று நாகேஸ்வர ராவ் குற்றம் சாட்டினார்.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஆந்திர மாநில சுகாதாரத்துறை அமைச்சர், இந்த விஷயம் உண்மை என்று கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தாலும், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்காது என்றும், எந்தவொரு மருத்துவரும் தேவையில்லாமல் அறுவை சிகிச்சை செய்யும் சூழ்நிலை இருக்காது என்றும் சில நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

By admin