பட மூலாதாரம், UGC
-
- எழுதியவர், லக்கோஜு ஶ்ரீனிவாஸ், கரிகிபட்டி உமாகாந்த்
- பதவி, பிபிசிக்காக
-
ஆந்திராவில் பத்ராசலத்தில் இருந்து அன்னாவரம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் மரேடுமல்லி என்கிற இடம் அருகே பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ராம்பச்சோதவரம் துணை ஆட்சியர் ஷுபம் நக்வால் பிபிசியிடம் பேசுகையில் மாலை 5 மணிக்கு அரக்குவில் இருந்து பத்ராசலம் நோக்கி சென்றபோது மாலை 5 மணிக்கு விபத்து நிகழ்ந்ததாக தெரிவித்தார்.
பேருந்து திருப்பத்தில் சென்றபோது பேருந்துவின் கியர்பாக்ஸ் வேலை செய்யாததால் கட்டுப்படுத்த முடியாமல் போனது என ஓட்டுநர் தெரிவித்ததாக துணை ஆட்சியர் கூறினார்.
இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாகவும் 22 பேர் காயமடைந்ததாகவும் சிந்தூர் ஒருங்கிணைந்த பழங்குடிகள் வளர்ச்சி திட்ட அதிகாரி ஸ்மரன் ராஜ் பிபிசியிடம் உறுதிபடுத்தினார்.
சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் பத்ராசலத்தில் உள்ள ராமர் கோவிலுக்குச் சென்றுவிட்டு அன்னாவரம் செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.