• Sat. Aug 23rd, 2025

24×7 Live News

Apdin News

ஆன்லைன் கேமிங் மசோதா: பப்ஜி, ஃபிரீ ஃபயர் நிலை என்ன? 7 முக்கிய அம்சங்கள்

Byadmin

Aug 23, 2025


புதன்கிழமை (ஆகஸ்ட் 20), இந்திய அரசு மக்களவையில் 'ஆன்லைன் கேமிங்கை ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மசோதா, 2025'-ஐ அறிமுகப்படுத்தியது. எதிர்க்கட்சிகளின் கூச்சலுக்கு மத்தியில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாரம்பரிய சூதாட்டத்துடன் ஒப்பிடும்போது இளைய தலைமுறையினர் ஆன்லைன் சூதாட்டத்தில் அதிகளவில் ஈர்க்கப்படுவதாக டிஜிட்டல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

நீங்கள் ஃபேன்டஸி கிரிக்கெட், ரம்மி, லூடோ, போக்கர் (poker) போன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் பந்தயம் வைத்து விளையாடுகிறீர்களா? வீட்டில் உட்கார்ந்து கொண்டே நிமிடங்களில் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான ரூபாயை சம்பாதிக்க வேண்டும் என்று கனவு காண்கிறீர்களா?

ஆம் என்றால், நீங்கள் இனி கவனமாக இருக்க வேண்டும்.

புதன்கிழமை (ஆகஸ்ட் 20), இந்திய அரசு மக்களவையில் ‘ஆன்லைன் கேமிங்கை ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மசோதா, 2025’-ஐ அறிமுகப்படுத்தியது. எதிர்க்கட்சிகளின் கூச்சலுக்கு மத்தியில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்பின், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு சட்டமாக மாறும்.

By admin