• Sun. Aug 17th, 2025

24×7 Live News

Apdin News

“ஆன்லைன் விளையாட்டில் ரூ.1 கோடி இழந்தேன்” : சட்டவிரோத செயலிகளால் பறிபோகும் இளைஞர்களின் வாழ்க்கை

Byadmin

Aug 16, 2025


பாலாஜி
படக்குறிப்பு, பாலாஜியின் வீடு சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள லால் கிராமத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு குடியிருப்பில் அமைந்துள்ளது.

“78 லட்சம் மதிப்புள்ள நிலத்தை விற்றேன். டிராக்டரை வைத்து 2 லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். ஒரு பொற்கொல்லரிடம் தங்கத்தை அடகு வைத்தேன். எனக்குத் தெரிந்தவர்களிடம் இருந்து ஐந்து முதல் ஆறு லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கினேன். மொத்தமாக அதில் 1 கோடி 9 லட்சம் ரூபாய் செலவாகிவிட்டது. எனது வங்கிக் கணக்கில் இருந்த பணம் முழுவதும் காலியான போதுதான் நிறுத்தினேன்.”

26 வயதான பாலாஜி கரே இதனைச் சொல்லிவிட்டு, எதுவும் பேசாமல் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார்.

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டத்தில், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பாலாஜி இழந்துள்ளார்.

“நான் ஆன்லைன் சக்ரி விளையாட்டுகளை மட்டுமே விளையாடுவேன். அதில் பதினாறு முதல் பதினேழு விளையாட்டுகள் இருந்தன. ஆனால் நான் சக்ரியை மட்டுமே விளையாடுவேன். ஃபன்ரெட் சக்ரி. இதில் நான் தனியாக இல்லை, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். யாருக்கும் எந்தப் பணமும் கிடைக்கவில்லை”என்கிறார் பாலாஜி.

By admin