• Mon. Jan 5th, 2026

24×7 Live News

Apdin News

ஆபாச படங்களை உருவாக்குவதாக க்ரோக் ஏஐ நிறுவனத்தின் மீது புகார்

Byadmin

Jan 4, 2026


ஈலோன் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு கருவியான க்ரோக்கைப்  பயன்படுத்தி, ஒரு பெண்ணின் ஆடைகள் டிஜிட்டல் முறையில் நீக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Samantha Smith

படக்குறிப்பு, ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளரும் , வர்ணனையாளருமான சமந்தா ஸ்மித்

ஈலோன் மஸ்க்கின் க்ரோக் என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தன்னுடைய ஆடைகளை டிஜிட்டல் முறையில் அகற்றியதாக கூறி, ஒரு பெண் பிபிசிக்கு பேட்டியளித்துள்ளார்.

இது குறித்து அந்தப் பெண் பிபிசி-யிடம் கூறுகையில், தான் “ஒரு பாலியல் பிம்பமாக சுருக்கப்பட்டதைப்” போல உணர்வதாகத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில், பயனர்கள் அந்த சாட்பாட்டிடம் பெண்களின் அனுமதியின்றி அவர்களின் ஆடைகளை நீக்கி, பிகினி உடையில் தோன்றுமாறு செய்வது மற்றும் அவர்களைப் பாலியல் சூழல்களில் சித்தரிப்பது போன்ற பல உதாரணங்களை பிபிசி கண்டுள்ளது.

க்ரோக் -ஐ உருவாக்கிய நிறுவனமான xAI, இது குறித்த கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அதற்குப் பதிலாக, “பாரம்பரிய ஊடகங்கள் பொய் சொல்கின்றன” என்ற தானியங்கிப் பதிலையே வழங்கியது.

சமந்தா ஸ்மித் என்பவர் தனது புகைப்படம் மாற்றப்பட்டது குறித்து எக்ஸ் தளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதற்குப் பதிலளித்த பலரும் தங்களுக்கும் இதே போன்ற அனுபவம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளனர். அதே நேரத்தில், வேறு சிலரோ சமந்தாவின் மேலும் பல படங்களை உருவாக்குமாறு க்ரோக்கிடம் கேட்டுள்ளனர்.

By admin