• Mon. Apr 7th, 2025

24×7 Live News

Apdin News

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா விட்டுச் சென்ற ஆயுதங்கள் என்ன ஆயின?

Byadmin

Apr 7, 2025


தாலிபன்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2021 ஆம் ஆண்டு தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றியபோது, ​​அவர்களிடம் சுமார் 1 மில்லியன் ராணுவ ஆயுதங்கள் இருந்தன

ஆப்கானிஸ்தானில் இருந்து ஐந்து லட்சம் ஆயுதங்கள் காணாமல் போயுள்ளன. அவை விற்கப்பட்டிருக்கலாம் அல்லது கடத்தப்பட்டிருக்கலாம் என பிபிசியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஆயுதங்களில் சில அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களின் கைகளுக்கும் சென்றுவிட்டன என்று ஐக்கிய நாடுகள் சபை நம்புகிறது.

2021 ஆம் ஆண்டில் தாலிபன் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய போது, ​​சுமார் 10 லட்சம் ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் இருந்ததைக் கண்டுபிடித்ததாக பெயர் வெளியிட விரும்பாத ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவின் நிதி உதவியுடன் வாங்கப்பட்டவை. அவற்றில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்4 மற்றும் எம்16 ரக துப்பாக்கிகளும் அடங்கும்.

By admin