• Wed. May 14th, 2025

24×7 Live News

Apdin News

ஆப்கானிஸ்தானில் Chess விளையாட தடை! – Vanakkam London

Byadmin

May 14, 2025


ஆப்கானிஸ்தானில் சதுரங்கம் (Chess) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் காலவரையற்ற தடை விதித்துள்ளது.

இந்தத் தடை, சதுரங்க ஆர்வலர்கள் மற்றும் தொடர்புடைய வணிகங்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

Chess தடை குறித்து அந்நாட்டின் விளையாட்டு பணிப்பாளர் கூறுகையில், இஸ்லாமிய ஷரியாவின் கீழ் சதுரங்கம் சூதாட்டத்தின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது.

இது நாட்டின் “நன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையைத் தடுப்பதற்கான சட்டத்தின்” படி தடைசெய்யப்பட்டுள்ளது.

சதுரங்கத்திற்கு மத ரீதியான ஆட்சேபனைகள் உள்ளன. இந்த ஆட்சேபனைகள் தீர்க்கப்படும் வரை, ஆப்கானிஸ்தானில் இந்த விளையாட்டு நிறுத்தி வைக்கப்படும்” என்று கூறினார்.

இதேவேளை, பெண்கள் எந்தவொரு விளையாட்டுகளில் பங்கேற்கத் தாலிபான் ஏற்கெனவே தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin