• Sun. Jan 12th, 2025

24×7 Live News

Apdin News

ஆப்கானிஸ்தான் தாலிபன் அரசுடன் இந்தியா பேச்சு நடத்துவதால் பாகிஸ்தானில் கவலை எழுவது ஏன்?

Byadmin

Jan 12, 2025


இந்தியா - தாலிபன் உறவு, பாகிஸ்தான் கவலை

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்திய அதிகாரிகளுடன் தாலிபன் அரசின் முக்கிய உறுப்பினர்கள்

இந்தியா - தாலிபன் உறவு, பாகிஸ்தான் கவலை

பட மூலாதாரம், ani

படக்குறிப்பு, இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஆப்கானிஸ்தானில் தாலிபன் அரசின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தாகியை சந்தித்தார்.

இந்தியாவுக்கும் தாலிபன்களுக்கும் இடையே அதிகரித்து வரும் பேச்சுவார்த்தை தொடர்பாக பாகிஸ்தானின் ஊடகங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

தாலிபனை எதிர்த்து வந்த இந்தியா தற்போது அதற்கு ஆதரவான போக்கை கடைபிடிக்க தயாராகி வருகிறது என்று பாகிஸ்தான் வெளியுறவு விவகாரம் குறித்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் செல்வாக்கு மீண்டும் அதிகரிக்கலாம் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி 8-ஆம் தேதி இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, தாலிபன் அரசின் தற்காலிக வெளியுறவுத்துறை அமைச்சர் ஆமிர்கான் முத்தாகியை துபாயில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பிராந்தியத்தில் இந்தியாவை முக்கியமான பொருளாதார கூட்டாளியாக ஆப்கானிஸ்தான் கருதுவதாக தாலிபனின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

By admin