• Sun. Feb 22nd, 2026

24×7 Live News

Apdin News

ஆப்கானிஸ்தான் மீது வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு தாலிபன் எச்சரிக்கை – என்ன நடந்தது?

Byadmin

Feb 22, 2026


தாலிபன், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சரியான நேரத்தில் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாலிபன் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள உள்ள ‘ஏழு பயங்கரவாத மறைவிடங்கள் மற்றும் முகாம்களை’ குறிவைத்து தாக்கியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. உளவுத் தகவலின் அடிப்படையில் இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

நங்கர்ஹர் மற்றும் பக்டிகாவில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

சரியான நேரத்தில் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாலிபன் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

பிபிசி பாஷ்டோ மொழி சேவையின்படி, நங்கர்ஹர் மற்றும் பக்டிகா மாகாணங்களில் ‘பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில்’ பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களைக் கண்டிப்பதாக ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நங்கர்ஹரில் ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதாகவும், பக்டிகாவில் ஒரு மதரஸா தாக்குதலுக்கு இலக்கானதாகவும் கூறப்படுகிறது.

By admin