• Wed. Nov 27th, 2024

24×7 Live News

Apdin News

ஆப்ரிக்கா: 15 மாத ‘கர்ப்பம்’ – நடந்தது என்ன? பிபிசி புலனாய்வு

Byadmin

Nov 27, 2024


நைஜீரியாவின் விசித்திரமான கர்ப்ப மோசடி விவகாரம்

  • எழுதியவர், யெமிசி அடெகோக்,சியாகோசி நோன்வு மற்றும் லினா ஷைகோனி
  • பதவி, பிபிசி உலக செய்திகள்

சியோமா தனது கைகளில் வைத்திருக்கும் ஆண் குழந்தை ஹோப் தனது மகன் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். எட்டு வருடங்களாக கருத்தரிக்காமல் இருந்த அவர் ஹோபை தன் அதிசயக் குழந்தையாகப் பார்க்கிறார்.

“ஹோப் என்னுடைய மகன்,” அவர் உறுதிபடச் சொல்கிறார்.

தம்பதியினரை விசாரிக்கும் நைஜீரிய அரசு அதிகாரியின் அலுவலகத்தில் தனது கணவர் இக்கேவுக்கு அருகில் அமர்ந்துள்ளார் சியோமா.

அனம்ப்ரா மாநிலத்தில் மகளிர் விவகாரங்கள் மற்றும் சமூக நல ஆணையராக (commissioner for women affairs and social welfare), இஃபி ஒபினாபோ குடும்ப பிரச்னைத் தொடர்பான மோதல்களைத் தீர்ப்பதில் அனுபவம் உடையவர். ஆனால் இந்த விவகாரம் சாதாரண கருத்து வேறுபாடு அல்ல.

By admin