0
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான ஆகாஷ் ஜெகன்நாத் அதிரடி எக்சன் நாயகனாக நடித்திருக்கும் ‘தல்வார்’ எனும் திரைப்படத்தின் அறிமுக காணொலி வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் காசி பரசுராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தல்வார்’ எனும் திரைப்படத்தின் ஆகாஷ் ஜெகன்நாத், பிரகாஷ் ராஜ் பூரி ஜெகன்நாத், அனுசுயா பரத்வாஜ், ஷைன் டாம் சாக்கோ, அஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். திரிலோக் சித்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கேசவ கிரண் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி எல் வி குழுமம் மற்றும் வார்னிக் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதங்களில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.
இப்படத்திற்காக படக்குழுவினர் வெளியிட்டிருக்கும் ஒலி வடிவிலான பிரத்யேக அறிமுக காணொலியில் இடம் பிடித்திருக்கும் உரையாடல்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது அதிலும் ”ஆயுதங்களின் வடிவங்கள் மாறலாம். ஆனால் போர் தொடர்ந்து கொண்டே இருக்கும்” எனும் வசனம் உலகில் இன்று நடைபெற்று வரும் போரை குறிப்பிடுவதால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.