• Tue. Dec 23rd, 2025

24×7 Live News

Apdin News

ஆரவல்லி மலைத்தொடரை பாதுகாக்க ஒன்றுகூடிய வட இந்திய மக்கள் – மத்திய அரசு சொல்வது என்ன?

Byadmin

Dec 23, 2025


இந்தியாவின் ஆரவல்லி மலைத்தொடர் ஏன் போராட்டங்களின் மையமாக மாறியுள்ளது?

பட மூலாதாரம், Getty Images

உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடர் ராஜஸ்தான் முதல் ஹரியாணா, குஜராத், டெல்லி ஆகிய பகுதிகள் வரை பரவி அமைந்துள்ளது.

இந்த மலைத்தொடர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் மறுவரையறை வழங்கியுள்ளதைத் தொடர்ந்து வட இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

மத்திய அரசின் பரிந்துரைகளைத் தொடர்ந்து நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய வரையறையின் கீழ், சுற்றியுள்ள நிலப்பரப்பில் இருந்து குறைந்தது 100 மீட்டர் (328 அடி) உயரத்தில் இருக்கும் நிலப்பரப்புகள் மட்டுமே ‘ஆரவல்லி மலை’ என்று அழைக்கப்படும்.

ஐந்நூறு மீட்டர் இடைவெளிக்குள் இத்தகைய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மலைகள் அமைந்திருந்தால், அவற்றுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியுடன் சேர்த்து அது ‘ஆரவல்லி மலைத்தொடர்’ எனக் கருதப்படும்.

ஆரவல்லி மலைத்தொடரை அதன் உயரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வரையறுப்பது, புதர்க்காடுகள் நிறைந்து சூழலியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் மலைத்தொடரின் பகுதிகளை, சுரங்க வேலைகள் மற்றும் கட்டுமான செயல்பாடுகளில் இருந்து பாதுகாப்பதைத் தடுக்கும் அபாயம் இருப்பதாக சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் வாதிடுகின்றனர்.

By admin