• Sun. Aug 9th, 2026

24×7 Live News

Apdin News

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினமும் எவ்வளவு சூரிய ஒளி தேவை? 4 கேள்வி – பதில்கள்

Byadmin

Aug 9, 2026


சூரிய ஒளி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கிளாடியா பொசாடா
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

சிலருக்கு கோடைக்காலத்தில் தினமும் சில நிமிடங்கள் சூரிய ஒளி போதுமானதாக இருக்கும். மற்றவர்களுக்கு அதைவிட அதிக நேரம் தேவைப்படலாம்.

1923-ஆம் ஆண்டு மத்தியதரைக் கடல் பயணத்துக்குப் பிறகு வெயிலில் குளித்துத் திரும்பிய கோகோ ஷனலின் புகைப்படங்கள், உடலில் வெயிலால் நிறம் மாறும் பழக்கத்தையும் சூரியக் குளியலையும் பிரபலப்படுத்தின. அவரது பழுப்பு நிற சருமம் ஒரு சமூக அந்தஸ்தின் அடையாளமாக மாறியதுடன், சூரிய ஒளி குறித்த மேற்கத்திய சமூகத்தின் பார்வையையும் மாற்றியது.

1900-களின் தொடக்கம் முதல் நடுப்பகுதி வரை, ஹீலியோதெரபி எனப்படும் சூரிய ஒளியை சிகிச்சைக்காகப் பயன்படுத்தும் முறை, ரிக்கெட்ஸ் மற்றும் காசநோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்க சிகிச்சை மையங்களில் பயன்படுத்தப்பட்டது. அப்போது, “ஆரோக்கியமான பழுப்பு நிற சருமம்” என்பது ஊக்குவிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது.

ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, சூரிய ஒளியுடனான நமது உறவு மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் அதிகரித்த தோல் புற்றுநோய் பாதிப்புகள், சூரிய ஒளி குறித்த மருத்துவ அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தின. இதையடுத்து, சூரிய ஒளியைத் தவிர்ப்பதற்கும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பொது சுகாதாரப் பிரசாரங்கள் மாறின.

அதிகப்படியான சூரிய ஒளி வெளிப்பாடு தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்துடன் தொடர்புடையது என்பதற்கான ஆதாரங்கள் இன்றும் வலுவாக உள்ளன.

By admin