1
கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகியன இணைந்து ஆர்க்டிக் பகுதியில் புதிய இராணுவ ரேடார் அமைப்பை உருவாக்கவுள்ளதாக கனடாவின் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மார்க் கார்னி குறிப்பிடுகையில், “கனடாவின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கூட்டாளியான அவுஸ்திரேலியாவுடன் இணைந்து நீண்ட தூர over-the-horizon ரேடார் அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
இது 6 பில்லியன் டொலர் மதிப்புடைய முதலீடு. இதன்மூலம் ஆர்க்டிக் பகுதிகளில் காற்று மற்றும் கடல் மூலம் வரும் அச்சுறுத்தல்களை விரைவாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கலாம்” என்றார்.
மேலும், இது அமெரிக்கா – கனடா பாதுகாப்பு அமைப்பான NORADஐ கூடுதல் வலுவாக்கும் என்றும் கனடாவின் பாதுகாப்புக்கு மிக முக்கியமானது என்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி கூறினார்.