• Tue. May 20th, 2025

24×7 Live News

Apdin News

ஆர்சிபியின் கோப்பை கனவுக்கு ஆபத்தா? வெளியேறும் வெளிநாட்டு வீரர்களால் புதிய சிக்கல்

Byadmin

May 20, 2025


விராட் கோலி, ஆர்சிபி, பிளே ஆஃப்,

பட மூலாதாரம், Pankaj Nangia/Getty Images

ஓர் ஆண்டல்ல, 17 ஆண்டுகளாக ஆர்சிபி அணி ஐபிஎல் சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்ற போராடி வருகிறது. 18-வது ஆண்டாக இந்த முறையும் ஆர்சிபி அணி தனது போராட்டத்தில் இருந்து தளர்ந்துவிடவில்லை, கோப்பைக்கான தனது தேடலிலும், முயற்சியிலும் சிறிதுகூட தொய்வில்லாமல் ஒவ்வொரு போட்டியையும் அணுகுகிறது, ப்ளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியிருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் 5 முறை ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ரசிகர்களும் ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல முடியவில்லேயே என்பதற்காக தங்களின் ஆதர்ச அணியின் மீதான ஈர்ப்பையும், ரசிப்பையும் சிறிதுகூட குறைக்கவில்லை. பாரம்பரிய ஆர்சிபி ரசிகர் இன்னும் ஆர்சிபி ரசிகராகவே இருந்து வருகிறார். ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் “ஈ சாலா கப் நமதே” என்ற வாசகத்தை உற்சாகம் குறையாமல் உரக்கக் கூறி வருகிறார்கள்.

ஆர்சிபி அணி ஒவ்வொரு முறையும் கோப்பைக்காக தனது போராட்டத்தை உற்சாகமாக நடத்துவதற்கு அந்த அணியின் ரசிகர்களின் ஆதரவும் முக்கியக் காரணம்.

ஆர்சிபி அணியால் ஏன் இத்தனை ஆண்டுகளாக ஒரு கோப்பையைக்கூட வெல்ல முடியவில்லை?, கோப்பையை வெல்லும் தகுதி இல்லையா? வீரர்களுக்கு மன உறுதி இல்லையா என்ற பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மனதில் எழுந்தாலும் அதற்கான பதில்கள் வலுவாகவே இருக்கின்றன.

By admin