சென்னை: தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் மனுக்களை இணையவழியில் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேர்வர்களுக்கான சேவைகளை இணைவழியில் வழங்கும் விதமாக தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனுக்களை இணையவழியில் பெறும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தேர்வர்கள் இச்சட்டத்தின்கீழ் மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை https://rtionline.tn.gov.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி இணையவழியில் சமர்ப்பிக்கலாம். எனவே, தேர்வர்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் மனுக்கள் மற்றும் மேல் முறையீடு்களை தேர்வாணை யத்துக்கு தபால் மூலம் அனுப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.