• Sat. Apr 11th, 2026

24×7 Live News

Apdin News

ஆர்டெமிஸ்-2 குழு பூமிக்குத் திரும்பியது: விண்கலம் 6 நிமிடம் தொடர்பை இழந்த போது என்ன நடந்தது?

Byadmin

Apr 11, 2026


ஆர்டெமிஸ்-2, ஸ்ப்லாஷ்டவுன்

பட மூலாதாரம், NASA

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மனிதர்கள் இதுவரை பயணித்திராத தொலைவை எட்டிய ஆர்டெமிஸ்-2 குழுவினர் தங்களது 10 நாள் நிலவுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பூமிக்குப் பாதுகாப்பாகத் திரும்பியுள்ளனர்.

அவர்கள் பயணித்த ஓரியான் விண்கலமானது, அமெரிக்க கிழக்கு நேரப்படி, வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8.07 மணியளவில் (இந்திய நேரப்படி அதிகாலை சுமார் 5.37 மணிக்கு), சான் டியாகோவுக்கு அருகே உள்ள கடல் பகுதியில் திட்டமிட்டபடி தரையிறங்கியது. இது ஸ்ப்லாஷ்டவுன் என்று அழைக்கப்படுகிறது.

ஸ்ப்லாஷ்டவுன் நிகழ்வு மூலம் கடலில் விழுந்த ஓரியன் விண்கலம் அமெரிக்க கடற்படை கப்பல் மூலம் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்படுகிறது.

4 விண்வெளி வீரர்களும் நலம்

ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் நிலவுக்குச் சென்று வந்த 4 விண்வெளி வீரர்களும் நலமாக இருப்பதாக நாசா உறுதிப்படுத்தியுள்ளது.

ஓரியன் விண்கலத்திற்குள் சென்று முதல் கட்ட பரிசோதனைகளை செய்த மருத்துவ அதிகாரி, குழுவின் நான்கு உறுப்பினர்களும் ‘பச்சை’ நிலையில் (பாதுகாப்பாக) இருப்பதாக உறுதிப்படுத்தினார்.

By admin