• Fri. Feb 27th, 2026

24×7 Live News

Apdin News

ஆர். நல்லகண்ணு தண்டிக்கப்பட்ட நெல்லை சதி வழக்கின் பின்னணி என்ன?

Byadmin

Feb 27, 2026


ஆர். நல்லகண்ணு, நெல்லை சதி வழக்கு, பொதுவுடமைக் கட்சி, வரலாறு

பட மூலாதாரம், HANDOUT

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்தியா சுதந்திரமடைந்த தருணத்தில் தொடரப்பட்ட நெல்லை சதி வழக்கில், மறைத்த பொதுவுடமைக் கட்சித் தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கு குறித்து மிகக் குறைவான தகவல்களே கிடைக்கின்றன. இந்த வழக்கின் பின்னணி என்ன?

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், அப்போதைய அரசுக்கு எதிரான போராட்டங்கள், நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றில் பல வழக்குகள் ‘சதி வழக்குகள்’ என அழைக்கப்பட்டன. தமிழ்நாட்டிலும் இதுபோல தூத்துக்குடி சதி வழக்கு, திருநெல்வேலி சதி வழக்கு, குலசேகரபட்டனம் சதி வழக்கு போன்ற வழக்குகள் உண்டு.

திருநெல்வேலி சதி வழக்கு

இதில், திருநெல்வேலி சதி வழக்கு என்ற பெயரில் பல சதி வழக்குகள் குறிப்பிடப்படுகின்றன. முதலாவது சதி வழக்கு, வாஞ்சிநாதன் அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ராபர்ட் ஆஷை 1911ல் மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக்கொன்ற வழக்கு. இது தொடர்பான வழக்கே பெரும்பாலும் திருநெல்வேலி சதி வழக்கு என்று குறிப்பிடப்பட்டது. சிவலை இளமதி எழுதிய ‘சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்’ நூலும் இந்த வழக்கையே திருநெல்வேலி சதி வழக்காக குறிப்பிடப்படுகிறது.

இதற்குப் பிறகு, 1941ல் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்ட வழக்கையும் சில நாளிதழ்கள் திருநெல்வேலி சதி வழக்கு என்று குறிப்பிட்டன.

இதற்குப் பிறகு, 1949வாக்கில் தமிழ்நாட்டில், குறிப்பாக தற்போதைய திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு விசாரணக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த வழக்கும் நெல்லை சதி வழக்கு என்றே குறிப்பிடப்பட்டது. ஆங்கிலத்தில் ‘Tirunelveli District Communist Conspiracy Case’ என்று இந்த வழக்கு குறிப்பிடப்பட்டது. இந்த வழக்கில்தான் தமிழ்நாட்டின் மூத்த இடதுசாரித் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு, சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

By admin