• Thu. Jan 22nd, 2026

24×7 Live News

Apdin News

‘ஆர் யூ டெட்?’: தனியாக வாழும் இளைஞர்களுக்காக சீனாவின் புதிய செயலி

Byadmin

Jan 22, 2026


சீனா, செயலி, வாழ்வியல், தொழில்நுட்பம், துணை

பட மூலாதாரம், Getty Images

சீனாவில் “ஆர் யூ டெட்?” என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள ஒரு புதிய செயலி அந்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் செயல்முறை மிகவும் எளிமையானது. நீங்கள் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்த, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இந்தச் செயலியிலுள்ள ஒரு பெரிய பொத்தானை அழுத்த வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், நீங்கள் ஏதோ ஆபத்தில் இருப்பதை உங்கள் அவசர காலத் தொடர்பு எண்களுக்கு தானாகவே தகவல் தெரிவித்துவிடும்.

கடந்த ஆண்டு மே மாதம் பெரிய ஆரவாரமின்றி அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் செயலி, சமீபத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சீன நகரங்களில் தனியாக வசிக்கும் ஏராளமான இளைஞர்கள் தற்போது இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

இது, அந்த நாட்டியிலேயே அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்ட கட்டணச் செயலியாக உருவெடுத்துள்ளது.

சீனாவின் அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ அறிக்கையில், ஆய்வு நிறுவனங்களின் கணிப்புப்படி 2030-ஆம் ஆண்டிற்குள் சீனாவில் தனியாக வசிப்பவர்களின் எண்ணிக்கை 20 கோடியை எட்டக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனா, செயலி, வாழ்வியல், தொழில்நுட்பம், துணை

பட மூலாதாரம், Screenshot/Moonshot Technologies

படக்குறிப்பு, நீங்கள் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்த, தினமும் ஒரு பெரிய பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும் என்று இந்த செயலி கோருகிறது.

‘பாதுகாப்புத் துணை’

தன்னை ஒரு ‘பாதுகாப்புத் துணையாக’ வர்ணித்துக் கொள்ளும் இந்தச் செயலி, தனிமையில் பணிபுரியும் ஊழியர்கள், வீட்டை விட்டு வெளியூரில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் அல்லது தனிமையான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்தவர்களையே தனது இலக்காகக் கொண்டுள்ளது.

By admin