• Sat. Oct 4th, 2025

24×7 Live News

Apdin News

ஆளுநர் மாளிகை, முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | Bomb threat to Raj Bhavan, Chief Minister residence

Byadmin

Oct 4, 2025


சென்னை: ஆளுநர் மாளி​கை, முதல்​வர் ஸ்டா​லின் வீடு, விமான நிலை​யம் உட்பட சென்​னை​யில் பல்​வேறு இடங்​களுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​ட​தால் பரபரப்​பான சூழல் காணப்​பட்​டது.

சென்​னை​யில் கடந்த ஓராண்​டாகவே மின்​னஞ்​சல் மூலம் பள்​ளி, கல்​லூரி​கள், அரசு அலு​வல​கங்​கள், முதல்​வர், அமைச்​சர்​களின் வீடு, ஆளுநர் மாளிகை என பல்​வேறு இடங்​களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்​டல்​ விடுக்​கப்​பட்டு வரு​கிறது. இதில் தொடர்​புடைய குற்​ற​வாளி​களை போலீ​ஸார் தனிப்​படை அமைத்து தேடி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் நள்​ளிரவு 11.30 மணிக்கு டிஜிபி அலு​வல​கத்​துக்கு வந்த மின்​னஞ்​சலில், தமிழக பாஜக தலைமை அலு​வல​க​மான கமலால​யத்​தில் வெடிகுண்டு வைத்​துள்​ள​தாக​வும், சற்று நேரத்​தில் அது வெடித்து சிதறும் என்​றும் கூறப்​பட்​டிருந்​தது. நேற்று அதி​காலை 4.10 மணிக்கு டிஜிபி அலு​வல​கத்​துக்கு வந்த மற்​றொரு மின்​னஞ்​சலில் முதல்​வர் ஸ்டா​லின் வீட்​டில் குண்டு வைத்​துள்​ளதாக கூறப்பட்​டிருந்​தது. கிண்டி ஆளுநர் மாளி​கை, நடிகை த்ரிஷா வீடு, நடிகர் எஸ்​.​வி.சேகர் வீடு, சென்னை விமான நிலை​யம் ஆகிய இடங்​களுக்​கும் அடுத்​தடுத்து மிரட்​டல்​கள் விடுக்​கப்​பட்​டன.

போலீ​ஸார் உடனடி​யாக இது குறித்து உயர் அதி​காரி​களுக்கு தகவல் கொடுத்​தனர். இதையடுத்​து,வெடிகுண்​டு​களை கண்​டறிந்து அகற்​றும் நிபுணர்​கள் மற்​றும் மோப்பநாய்​களு​டன் போலீ​ஸார் விரைந்து சென்று அனைத்து இடங்​களி​லும் சோதனை நடத்​தினர். கிண்டி ஆளுநர் மாளி​கை, ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள முதல்​வர் ஸ்டா​லின் வீடு, அதே பகு​தி​யில் உள்ள நடிகை த்ரிஷா வீடு, மந்​தைவெளி​யில் உள்ள நடிகர் எஸ்​.​வி.சேகர் வீடு, தியாக​ராய நகரில் உள்ள கமலாலயம், சென்னை விமானநிலை​யம் என மிரட்டல் விடுக்​கப்​பட்ட அனைத்து இடங்களி​லும் சோதனை நடத்​தப்​பட்​டது.

ஆனால், சந்​தேகப்​படும் வகை​யில் எந்த பொருளும் கிடைக்​க​வில்​லை. இதையடுத்து, குண்டு மிரட்​டல் வெறும் புரளி என்​பது உறுதி செய்​யப்​பட்​டது. மிரட்​டல் மின்​னஞ்​சலை அனுப்​பியது யார் என்று போலீ​ஸார் வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​. இந்​நிலை​யில், எஸ்​.வி சேகர் நேற்று காவல் ஆணை​யர் அலு​வல​கத்​துக்கு வந்​தார். அப்​போது அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​போது, “கடந்த 3 நாளில் 5 முறை எனது வீட்​டுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டுள்​ளது. ஒவ்​வொரு முறை​யும் அக்​கறை எடுத்​துக் கொண்​டு,போலீ​ஸார் எங்​கள் வீட்​டுக்கு வந்து சோதனை செய்​கின்​றனர். இதற்கு நன்றி தெரிவிக்​கவே வந்​தேன்” என்றார்.



By admin