தமிழ் உள்பட இந்திய திரையுலகில் 10 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே தனது 92-வது வயதில் காலமானார். சனிக்கிழமை (ஏப்ரல் 11) ஏற்பட்ட மாரடைப்பைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தமிழில் இளையராஜா தொடங்கி ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் இசையில் வெவ்வேறு வகையான பாடல்களை ஆஷா போஸ்லே பாடியுள்ளார். அந்த வகையில், தமிழில் ஆஷா போஸ்லே குரலில் பிரபலமான 8 பாடல்களை பார்க்கலாம்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆஷா போஸ்லே
1) நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி (ஹேராம்)
ஆஷே போஸ்லேவின் தமிழ் பாடல்கள் என்கிற பட்டியலைத் தயாரித்தால் அதில் இந்தப் பாடல் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். ஹே ராம் படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலுக்கு இளையராஜா இசையமைக்க ஹரிஹரனுடன் இணைந்து அவர் பாடியிருப்பார்.
கொல்கத்தாவில் நிகழும் கதைக்களம் என்பதால் வங்காள மொழி கவிதையுடன் இந்தப் பாடல் தொடங்கும். 90களில் வெளியான பாடல் என்றாலும் தற்போது கேட்டாலும் செவிகளுக்கு விருந்தளிகும் வகையில் தனது குரலில் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தியிருப்பார் ஆஷா போஸ்லே
2) ஓ பட்டர்ஃப்ளை (மீரா)
இளையராஜா இசையில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா நடிப்பில் வெளியான மீரா படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றிருந்தது. தமிழில் ஆஷா போஸ்லே பாடிய குறிப்பிட்ட சில மெலடி பாடல்களில் இந்தப் பாடலுக்கு முக்கிய இடம் உண்டு.
எஸ்.பி.பாலசுப்ரமணியன் உடன் இந்தப் பாடலை ஆஷா பாடியிருப்பார். இந்தப் பாடலின் மெட்டுகளில் புல்லாங்குழல் இசை தனித்துவமாக இடம்பெற்றிருக்கும். புல்லாங்குழலிசையின் இனிமைக்கு நிகராக ஆஷா போஸ்லேவும் பாடியிருப்பார். இன்றளவும் நினைவுகூரப்படும் பாடலாக இருந்து வருகிறது.
பட மூலாதாரம், Pyramid
படக்குறிப்பு, ஓ பட்டர்ஃப்ளை பாடலில் ஒரு காட்சி
3) செண்பகமே செண்பகமே (எங்க ஊரு பாட்டுக்காரன்)
எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற செண்பகமே பாடல், பாடகர் மனோ குரலில் வெளிவந்த ஆண் பாடுவதாக அமைந்த பதிப்புதான் ரசிகர்களால் பரவலாக அறியப்பட்டதாக உள்ளது. ஆனால் அதே பாடலை கதாநாயகியின் பார்வையிலிருந்து ஆஹா போஸ்லே பாடியிருப்பார்.
பாரம்பரிய இசை தொடங்கி நவீன இசை வரை பல்வேறு வகையான பாடல்களை ஆஷா போஸ்லே பாடியிருந்தாலும் கிராமத்து பின்னணி கொண்ட கதைக்களத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை அவரது குரலில் கேட்பது இதமானதாக இருக்கும்.
4) செப்டம்பர் மாதம் (அலைபாயுதே)
செண்பகமே பாடலைக் கேட்டுவிட்டு அப்படியே சற்று நகர்ந்தால் இந்தப் பாடலை இவரா பாடியது என்கிற ஆச்சரியம் ஏற்படும். புத்தாயிரமாவது ஆண்டில் வெளியான அலைபாயுதே படத்தில் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்.
குறிப்பாக, செப்டம்பர் மாதம் பாடலுக்கு தனித்துவமான இடமுண்டு. இளமையின் துள்ளல் இந்தப் பாடல் முழுவதும் வெளிப்பட்டிருக்கும். இந்தப் பாடலை ஆஷே போஸ்லே பாடியிருப்பார்.
இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் வெளியான படம் சந்திரமுகி. ரஜினி, நயந்தாரா தொடங்கி ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் நடித்திருப்பார்கள்.
இந்த படத்தில் வரும் ‘கொஞ்ச நேரம்’ என்கிற டூயட் பாடலை மது பாலகிருஷ்ணன் உடன் இணைந்து ஆஷே போஸ்லே பாடியிருப்பார்.
6) எங்கெங்கே (நேருக்கு நேர்)
நடிகர் சூர்யா மற்றும் விஜய் உடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்த நேருக்கு நேர் படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. தேவா இசையமைத்திருப்பார். இந்தப் பாடலையும் ஹரிஹரன் உடன் இணைந்து பாடியிருப்பார்.
‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ என்ற பாடலுக்கு நேர்மாறானது இந்தப் பாடல். வேகமான மெட்டு கொண்ட இந்தப் பாடலுக்கும் அவரது குரல் கச்சிதமாக பொருந்திப்போயிருக்கும்.
பட மூலாதாரம், AP International
படக்குறிப்பு, கொஞ்ச நேரம் பாடலில் வரும் காட்சி
7) சாத்து நட சாத்து (சேதுபதி ஐபிஎஸ்)
மறைந்த நடிகர் விஜய்காந்த் மற்றும் மீனா இணைந்து நடித்த சேதுபதி ஐபிஎஸ் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும்.
இளையராஜா இசையில் உருவான இந்த துள்ளலிசைப் பாடலை ஆஷா போஸ்லே பாடியுள்ளார்.
8) வெண்ணிலா (இருவர்)
மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான படம் ‘இருவர்’. அதில் இடம்பெற்ற வெண்ணிலா என்கிற பாடலை ஆஷே போஸ்லே பாடியிருப்பார்.
ஐஸ்வர்யா ராய் இரட்டை வேடத்தில் நடித்த இந்தப் படத்தில் இளம் கதாபாத்திரத்தில் வரும் ஐஸ்வர்யா ராய்க்கு இந்தப் பாடல் வரும்.
படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்