• Wed. Oct 15th, 2025

24×7 Live News

Apdin News

ஆஷ்லே டெல்லிஸ்: அமெரிக்காவில் சீனாவுக்கு உளவு பார்த்ததாக இந்திய வம்சாவளி நபர் கைது – யார் அவர்?

Byadmin

Oct 15, 2025


ஆஷ்லே டெல்லிஸ், அமெரிக்கா, சீனா, இந்தியா, உளவு பார்த்ததாக கைது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆஷ்லே டெல்லிஸ் 2001 ஆம் ஆண்டில் அமெரிக்க வெளியுறவுத் துறையில் பணியாற்றத் தொடங்கினார் (கோப்புப் படம்)

வெர்ஜீனியாவின் வியன்னாவைச் சேர்ந்த 64 வயதான ஆஷ்லே டெல்லிஸ் தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை சட்டவிரோதமாகத் சேகரித்ததாக கிரிமினல் குற்றம்சாட்டப்பட்டு வார இறுதியில் கைது செய்யப்பட்டதாக அமெரிக்காவின் வெர்ஜீனியாவின் கிழக்குப் பகுதிக்கான அமெரிக்க அட்டர்னி லிண்ட்சே ஹாலிகன் கூறியுள்ளார்.

வெர்ஜீனியாவின் கிழக்கு மாவட்ட அமெரிக்க அட்டர்னி அலுவலகம் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

லிண்ட்சே ஹாலிகன், “நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து வகையான அச்சுறுத்தல்களிலிருந்தும் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நமது குடிமக்களின் பாதுகாப்புக்கு (Safety and Security) ஒரு தீவிரமான அச்சுறுத்தலாகத் தெரிகிறது,” என்று கூறினார்.

“இந்த வழக்கில் உண்மைகளும் சட்டமும் தெளிவாக உள்ளன. நாங்கள் நீதியை நிலைநாட்டுவதற்காக அவற்றைத் தொடர்ந்து பின்பற்றுவோம்.”



By admin