• Thu. Feb 5th, 2026

24×7 Live News

Apdin News

ஆஸ்டின் அப்பெல்பீ: ஆஸ்திரேலியாவில் 2 மணி நேரம் நீந்தி கடலில் தத்தளித்த குடும்பத்தை காப்பாற்றிய 13 வயது சிறுவன்

Byadmin

Feb 5, 2026


12 வயதான போ மற்றும் எட்டு வயதான கிரேஸ் ஆகியோருடன் ஜோன் மற்றும் ஆஸ்டின்

பட மூலாதாரம், ABC News/Briana Shepherd

படக்குறிப்பு, 12 வயதான போ மற்றும் எட்டு வயதான கிரேஸ் ஆகியோருடன் ஜோன் மற்றும் ஆஸ்டின்.

ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட தனது தாயையும் இரண்டு உடன்பிறந்தவர்களையும் காப்பாற்ற, மங்கலான வெளிச்சத்தில், கொந்தளிப்பான நீரில் நீந்திச் சென்ற 13 வயது சிறுவனின் மன உறுதி பாராட்டப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கில் உள்ள ஜியோகிராஃப் விரிகுடாவில் ஒரு குடும்பத்தினர் துடுப்புப் படகு சவாரி மற்றும் கயாக்கிங் செய்து கொண்டிருந்தனர், அப்போது பலத்த காற்று அவர்களின் காற்று நிரப்பப்பட்ட படகுகளை திசைதிருப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆஸ்டின் அப்பெல்பீ என்ற அந்த பதின்ம வயது சிறுவன் உதவி கேட்க கரையை நோக்கி மீண்டும் துடுப்பு அடிக்கத் தொடங்கினார். ஆனால் அவரது கயாக் படகில் தண்ணீர் புகுந்ததால் மீதமிருந்த 4 கிலோமீட்டர் (2 கடல் மைல்கள்) தூரத்தை நீந்தி கடந்தார்.

“இந்த குடும்பத்தினர் காட்டிய துணிச்சல், வலிமையும் அசாதாரணமானது, குறிப்பாக எச்சரிக்கையை எழுப்ப 4 கி.மீ நீந்திய அந்த சிறுவன்,” என்று நேச்சுரலிஸ்ட் தன்னார்வ கடல் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் கமாண்டர் பால் பிரெஸ்லேண்ட், அந்த சிறுவனின் முயற்சிகளை “சூப்பர் ஹ்யூமன்” என்று விவரித்தார்.

By admin