• Thu. Dec 11th, 2025

24×7 Live News

Apdin News

ஆஸ்திரேலியாவில் அரசின் தடையை மீறி குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது எப்படி?

Byadmin

Dec 10, 2025


டிசம்பர் 10 முதல், ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குக் குறைவான குழந்தைகள் சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பட மூலாதாரம், BBC/Jessica Hromas

படக்குறிப்பு, சமூக ஊடகத் தடை தன்னைப் போன்ற குழந்தைகளைத் தடுக்காது என்று இசபெல் உறுதியாக நம்புகிறார்

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்காக அமல்படுத்தப்பட்ட சமூக ஊடகத் தடையை முறியடிக்க, 13 வயது சிறுமியான இசபெல்லுக்கு ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆனது.

தடை விதிக்கப்பட்ட பத்துத் தளங்களில் ஒன்றான ஸ்னாப்சாட்டில் இருந்து வந்த ஒரு அறிவிப்பு அவரது திரையில் தோன்றியது. இந்த வாரம் தடைச்சட்டம் அமலுக்கு வந்தவுடன், அவர் 16 வயதுக்கு மேற்பட்டவர் என்பதை நிரூபிக்க முடியாவிட்டால், அவரது கணக்கு முடக்கப்படும் என்று அது எச்சரித்தது.

“நான் என் அம்மாவின் புகைப்படம் ஒன்றை எடுத்தேன். அதை கேமராவின் முன் காட்டினேன். உடனே அது என்னை உள்ளே அனுமதித்துவிட்டது. ‘உங்கள் வயதைச் சரிபார்த்ததற்கு நன்றி’ என்று கூட சொன்னது,” என்கிறார் இசபெல்.

மேலும், “யாரோ ஒருவர் பியோன்ஸின் முகத்தையும் பயன்படுத்தியதாகக் கூட கேள்விப்பட்டேன்,” என்றும் அவர் கூறினார்.

டிசம்பர் 10 முதல், ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குக் குறைவான குழந்தைகள் சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

By admin