ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிக் கட்டுப்பாட்டை மேலும் கடுமையாக்கும் புதிய சட்டங்களுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த சட்டங்கள் நடைமுறைக்கு வர அடுத்த கட்டமாக செனட்சபையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
துப்பாக்கிகளை அரசாங்கம் திரும்பப் பெறும் சட்டமும், துப்பாக்கி உரிமம் வழங்குவதற்கான பின்னணிச் சோதனைகளை கடுமையாக்கும் சட்டமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 14ஆம் தேதி பொண்டி கடற்கரையில் நடைபெற்ற யூதத் திருவிழாவின்போது நடந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்த புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இனிமேல் துப்பாக்கி உரிமம் பெற விண்ணப்பிப்பவர்களின் பின்னணி, உளவுத்துறையிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் விரிவாக சோதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி – பொண்டி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இங்கிலாந்தில் அஞ்சலி; பாதுகாப்பு அதிகரிப்பு!
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுமார் 4 மில்லியன் துப்பாக்கிகள் இருந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவற்றில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான துப்பாக்கிகள், பொண்டி தாக்குதல் நடந்த நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலை, துப்பாக்கி கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக அரசாங்கம் கூறியுள்ளது.
The post ஆஸ்திரேலியாவில் கடுமையான துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டங்களுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் appeared first on Vanakkam London.