• Thu. Feb 19th, 2026

24×7 Live News

Apdin News

ஆஸ்திரேலியாவுக்கு விளையாட சென்ற பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள் பாத்திரம் கழுவும், தெருவில் அமர்ந்திருக்கும் வைரல் புகைப்படங்களின் பின்னணி என்ன?

Byadmin

Feb 19, 2026


புரோ ஹாக்கி லீக்கில் ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து தோல்வியடைந்த பாகிஸ்தான் ஹாக்கி அணி புதன்கிழமை காலை நாடு திரும்பியது.

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

”ஆஸ்திரேலியாவில் தேசிய அணி வீரர்கள் சமையலறைகள், பாத்திரங்கள், துணிகள் மற்றும் கழிவறைகளை தாங்களே சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. உணவை நாங்களே சமைத்தோம் மற்றும் தெருக்களில் வசித்தோம்… பாத்திரங்களைக் கழுவி, சுத்தம் செய்த பிறகு வீரர்கள் போட்டிகளில் எப்படி செயல்படுவார்கள்?”

ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய பின்னர் லாகூர் விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் தேசிய ஹாக்கி அணியின் கேப்டன் இமாத் பட் இவ்வாறு கூறினார்.

ஆஸ்திரேலியாவில் நடந்த புரோ ஹாக்கி லீக்கில் அடுத்தடுத்து தோல்வியடைந்த பாகிஸ்தான் ஹாக்கி அணி புதன்கிழமை காலை நாடு திரும்பியது.

விமான நிலையத்தில் பேசிய கேப்டன் இமாத் பட், பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மேலும் தற்போதைய அணி நிர்வாகத்துடன் தன்னால் தொடர்ந்து பயணிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

By admin